poster
 
ண்ணையா குமாருக்கு எதிராக ஒரு போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  அந்த போஸ்டரில், குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
“1. கண்ணையா குமாருக்கு வயது 29.   இன்னும் ஜேஎன்யூவில் படித்துக்கொண்டிருக்கிறார்.    இந்திய அரசு அவரது படிப்புச் செலவுகளையெல்லாம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.   இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்புகிறார்.
2. சுந்தர் பிச்சை கரக்பூர் ஐஐடியில் உலோகவியல் (மெட்டலர்ஜி) படித்தார்.  23 வயதிலேயே பட்டம் வாங்கிவிட்டார்.  ஆண்டு வருமானம்: 335 கோடி ரூபாய் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறார்.”
இந்த போஸ்டருக்கு எதிராக ஸ்காட்சி என்ற ட்விட்டர்வாசி, ஒரு போஸ்டரை வெளியிட்டார்.  அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
1. கண்ணையா பேகுசராய் என்ற ஊரில் 3000 ரூபாய் மாத சம்பளத்தில் பிழைக்கும் குடும்பத்தைச்சேர்ந்தவர்.   தற்போது ஜேஎன்யூவில் பிஎச்டி ஆராய்ச்சி செய்கிறார்.    வறுமையிலுருந்தாலும் அரசியல் ஆர்வலர் ஆகிறார்.   நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், ஃபாசிஸம், ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றுக்கு எதிராக குரலெழுப்புகிறார்.
2. சுந்தர் பிச்சை சென்னையைச் சேர்ந்த எலெக்ட்ரிகல் என்ஜினியரின் மகன்.  கரக்பூர் ஐஐடியில் மெட்டலர்ஜி படித்தார்.  மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு வழங்கப்பட்ட மானியத்தில் படித்தார்.    இபோது அவரது ஆண்டு வருமானம். 335 கோடி ரூபாய்.   அக்கரையில் பச்சை தெரிந்ததும் இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டார்.”
– இப்போது இந்த போஸ்டர் வைரலாக பரவி வருகிறது.