டில்லி,
நேற்று ஒரே நாளில் ரூ.53 ஆயிரம் கோடி ரூபாய் பணம் இந்தியா முழுவதும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தகவல் தெரிவித்து உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் உள்ள வங்கி ஸ்டேட் வங்கி. இதன் இந்தியா முழுவதும் உள்ள கிளைகளின் வாயிலாக ரூ.53 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து உள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது.
மேலும் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. வங்கி ஏடிஎம்களும் 2 நாட்கள் செயல்படாது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
இதை தொடர்ந்து பொதுமக்கள் தங்களிம் உள்ள 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை ரூ.53 ஆயிரம் கோடிக்கு பொதுமக்கள் டெபாசிட் செய்துள்ளனர்.
நாடு முழுவதும் நேற்று காலை முதல் வங்கிகள் செயல்பட துவங்கின. புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் விநியோகிக்கப்பட்டது வந்தன.
இதனால் மக்கள் நீண்ட வரிசையில் வங்கிகளில் காத்திருந்து தங்கள் பணத்தை மாற்றி வந்தனர். ஏடிஎம்களில் ரூ.4000, வங்கிகளில் ரூ.10000க்கு மேல் பணத்தை எடுக்க முடியாது என்பதால் பலர் தங்கள் பணத்தை டெபாசிட் செய்தனர்.
இதுகுறித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளதாவது, பழைய நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.53 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், வெறும் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மட்டுமே ரூ.53 ஆயிரம் கோடிக்கு பொதுமக்கள் டெபாசிட் செய்துள்ளனர் ஸ்டேட் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் வரும் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், முதியவர்கள், பெண்கள் பணம் எடுக்க, செலுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
முதியவர்கள், பெண்களுக்கு என தனி வரிசை ஏற்படுத்தப்படும் எனவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது