திருப்பூரில் மளிகை கடை வைத்திருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த மொசிருதீன் என்ற இளைஞர் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் வசித்து வந்த திருப்பூர் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள், லேப்டாப் போன்றவற்றை புலனாய்வுப் பிரிவு போலீஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட மொசிருதீனுக்கு மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளது. திருப்பூரை அடுத்த ஆண்டிபாளையம் கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். அவரது சகோதரர் ஆஷ்துல்லாவும் அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
மொசிருதீன் ஏற்கனவே திருப்பூர், மங்கலம் சாலையில் கடை வைத்திருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் கோழிப்பண்ணை அருகே கடையை மாற்றியுள்ளார்.
அவரது குழந்தையை பள்ளியில் சேர்க்க சென்றபோது, குழந்தையின் சாதி சான்றிதழை பள்ளி நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர். அதற்கான கஜாதிச்சான்றிதழை எடுத்து வர மேற்கு வங்கம் சென்றபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது வசித்து வரும் திருப்பூர் முகவரியில் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.
மோஸிருதீனுக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பதை அறிந்த தேசிய புலனாய்வுப் பிரிவினர் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்து வந்தனர். அவரது நடவடிக்கைகள் தீவிரமாவதை உணர்ந்ததையடுத்து, அவரைக் கைது செய்துள்ளனர்.