mgr
வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்றாக வேண்டும். அதுவே, நாம் எம்.ஜி.ஆருக்கு செலுத்தும் நன்றிக் கடன் என முதல்வர் ஜெயலலிதா அதிமுகவினருக்கு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளுக்காக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’வரும் சட்டப் பேரவைத் பொதுத்தேர்தலில், இதற்கு முன் பெற்ற வெற்றிகளை காட்டிலும் பெரிய வெற்றியை அ.தி.மு.க. பெற்றாக வேண்டும். அதுவே, நம் எம்.ஜி.ஆருக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன் என்பதை அ.தி.மு.க.வினராகிய நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து, சூளுரை ஏற்கும் தருணமாக அமைந்திட வேண்டும். உங்கள் அன்புச் சகோதரியின் தலைமையிலான அரசு, துறைதோறும் ஆற்றி வரும் மகத்தான மக்கள் நலப் பணிகளை மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள். அனைவரும் மகிழும் வண்ணம் மக்களுக்கு தொண்டாற்றுங்கள்.
பல்வேறு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணி செய்து வரும் மக்கள் பிரதிநிதிகளாகிய அ.தி.மு.க. நிர்வாகிகளும், நிர்வாக பொறுப்புகளில் பணியாற்றி வருபவர்களும், என் உயிரினும் மேலான அ.தி.மு.க. தொண்டர்களும் ஒவ்வொருவரும் தங்கள் பணிகளை நேர்மையாகவும், திறமையாகவும் செய்யுங்கள். அ.தி.மு.க.வுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் உங்கள் ஒவ்வொருவருடைய பணியும் அமையட்டும்.
வெற்றி ஒன்றே நம் குறிக்கோள் என்பதை நினைவில் கொண்டு பணியாற்றுங்கள். எம்.ஜி.ஆரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் உங்கள் பணிகள் அமையட்டும். வெற்றிக்கான பணிகள் அனைத்தையும் தொடங்கிடுவீர்
தீய சக்தியின் அராஜகத்துக்கும், ஊழலுக்கும், சூறையாடலுக்கும், ஒழுக்கக் கேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க உங்களால் மட்டும் தான் முடியும்’’ என்று அவர் கூறியுள்ளார்.