04112015_mk_narayan_attacked-vo

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை பிரபாகரன் என்பவர் செருப்பால் அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“இந்து மையம்” சார்பில் இன்று மாலை ஈழ அகதிகள் குறித்த கருத்துருவாக்க அரங்கினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகடமியில் நடந்தது. இதில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன். “தி இந்து” பத்திரிகை குழுமத் தலைவர் நாளிதழின் ஆசிரியர் என். ராம்,சந்திரஹாசன் ஆகியோர் கந்துகொண்டனர்.

“இலங்கை அரசுக்கு ஆதரவாக உள்ள இந்து என்.ராம் மற்றும் ஈழப்போரில் தமிழர்க்கு துரோகம் செய்த எம்.கே. நாராயணன் ஆகியோர் ஈழ அகதிகள் குறித்த கருத்தரங்கில் கலந்துகொள்ளக்கூடாது” என்று மே 17 இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தது.

ஆகவே நிகழ்ச்சி நடந்த மியூசிக் அகடமியிலும் சுற்றுவட்டாரத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்திருந்தது.   பார்வையாளர்கள் பதிவு செய்யப்பட்ட பின்னரே, அரங்கினுள் அனுமதிக்கப்பட்டனர். அங்கும் தீவிரக் கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

மேடையில் எம்.கே. நாராயணன்..
மேடையில் எம்.கே. நாராயணன்..

நிகழ்ச்சி முடிந்தவுடன், மேடையை விட்டு இறங்கிய எம்.கே. நாராயணனை ஒருவர் திடீரென செருப்பால் அடிக்க ஆரம்பித்தார். இதனால் எம்.கே. நாராயணன் நிலைகுலைந்து கீழே விழுந்தார். “ஈழத்தமிழர்க்கு துரோகம் செய்த எம்.கே. நாராயணன் ஒழிக” என்று கோஷமிட்டபடியே அவரை அந்த நபர் தாக்கினார். “தமிழக சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு மதிக்கவில்லை” என்றும் அந்த நபர் கோஷமிட்டார். அருகிலிருந்த பாதுகாவலர்கள் ஓடிவந்து எம்.கே. நாராயணனை மீட்டனர்.

151104163714_prabakaran_mknarayanan_attacker_512x288_bbc_nocredit

 

தாக்கிய நபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகிறார்கள். அவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த பிரபாகரன் என்பது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் விசாரணை தொடர்கிறது.

இந்த சம்பவம் குறித்து, “அறிவற்ற மக்கள் விரோத கும்பல் நடத்திய தாக்குதல்” என்று என். ராம் தெரிவித்தார். மேலும், “ மே 17 இயக்கத்திடம் இருந்து அச்சுறுத்தல் வந்தபிறகு இந்து மையம், போலீஸாருக்கு தகவல் அளித்தது. இதையடுத்து காவல்துறை சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாட்டை செய்தது” என்றார்.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியை எதிர்த்து மே 17 இயக்கம் போராட்டம் நடத்தியது. அப்போது  எம்.கே. நாராயணன் மற்றும் என். ராம் ஆகியோரது  உருவப்படங்கள்  தீவைத்து எரிக்கப்பட்டது. .

எம்.கே.நாராயணன் மீதான தாக்குதலை, மே 17 இயக்கத்தின் திருமுருகன்காந்தி வரவேற்றுள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில், “புதுக்கோட்டை அறந்தாங்கியை சார்ந்த வீரத்தமிழர் தோழர். பிரபாகரன் எம்.கே.நாராயணனை செருப்பால் பலமுறை அறைந்தார்.    அந்த வீரத்தமிழனுக்கு வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்