முதல் டெஸ்ட்டிலேயே சதம் அடிப்பது மாதிரி அறிமுகமான “பீட்சா”விலேயே ஒட்டுமொத்த தமிழகத்தைத் திரும்பிப்பார்க்க வைத்தவர் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ். அந்த முதல் படத்துக்கே ஏகப்பட்ட பாராட்டுக்களுடன், விருதுகளும் குவிந்தன. அதே போல அடுத்த படமான “ஜிகர்தண்டா”வும் அனைவரையும் ரசிக்க வைத்தது. அடுத்ததாக வருகிறது இவரது “இறைவி”.
“என் ஒருபடம் போல் அடுத்த படம் இருக்காது. நல்ல விஷயங்களை மக்கள் ஏத்துக்கறாங்க. அதனால புதுப்புது விசயங்களை கொடுக்கணும்னு ஆர்வமா இருக்கேன்” என்ற கார்த்திக் சுப்புராஜிடம், “உங்கள் குரு யார்?” என்றோம்.
“பெங்களூரில் பிலிம் அகடமி வச்சிருக்கும் சஞ்சய் நம்பியார் தான் என் ரோல் மாடல். ஆரம்ப காலத்தில் நான் ஒருசாப்ட்வேர் எஞ்சினியர். அதுக்கப்பறம் தான் பிலிம் மேக்கிங் என்னோட பாதைன்னு முடிவு பண்ணினேன். பெங்களூரில்சினிமா சம்மந்தமான வொர்க்க்ஷாப் நடந்தது. அந்த விழாவை நடத்தியது சஞ்சய் நம்பியார் சார் தான்.
அந்த வொர்க் ஷாப் எனக்குள்ள ஒரு சினிமா தாகத்தை ஏற்படுத்தியது. இப்படி தான் என் சினிமா வாழ்க்கைதொடங்கியது. ப்ரோடக்க்ஷன்ல ஜாயின் பண்றதுக்கு முன்னாடி ரைட்டிங் அண்ட் ஸ்டோரி போர்ட் கத்துகிறது ரொம்பஅவசியம்னு தெரிஞ்சிகிட்டேன் . சஞ்சய் நம்பியார் சொல்லி கொடுக்கும் விதம், நாமளே ஒரு தனி ஆளா சுயமாக படம்எடுக்கும் அளவிற்கு திறமையை வளர்த்துவிடும் . எனக்கு அவர் தான் சினிமாவோட அடிப்படையை கத்துக்கொடுத்தார். அவர் தான் என் சினிமா வாழ்க்கையின் குரு” என்றார் கார்த்திக் சுப்புராஜ்.
குரு சஞ்சய் நம்பியாரிடம் பயிற்சி பெற்றபோது கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய “ஹூ ஈஸ் த இண்டியன்” குறும்படத்தை பார்த்து ரசியுங்கள்….