சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிர்ச்சிகரமான தோல்வியை சந்திந்தது விஜயகாந்த் கட்சி. இதன் காரணமாக அவரது கட்சி முக்கிய நிர்வாகிகள் பலர் தி.மு.க., அதிமுக போன்ற மற்ற கட்சிகளை நாடி சென்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவில் ஐக்கியமான ஈரோடு தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் லோகநாதன், தென்சென்னை மாவட்ட செயலாளர் வேணு, கடலூரைச் சேர்ந்த கவுன்சிலர் துரை மகாதேவன் ஆகியோர் மீண்டும் தேமுதிக.வுகே திரும்பி உள்ளனர்.
கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் பொருளாளர் இளங்கோவன், செயலாளர் பார்த்தசாரதி முன்னிலையில் தங்களை மீண்டும் இணைத்துக் கொண்டனர்.