8

 

ன்று தனது 31வது பிறந்தநாளை  இனிதே கொண்டாடுகிறார் கனவுக்கன்னி நயன்தாரா. ரசிகர்களுக்கு தனது பிறந்தநாள் பரிசாக, தனக்கு வந்த முதல் காதல் கடிதம் பற்றி மனம் திறந்திருக்கிறார்.

இதோ நயனின்  கிள்ளை (!) மொழியிலேயே.. “அப்போது பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன்.  அது ஆண், பெண் இருபாலரும் படிக்கக்கும் பள்ளி.

பசங்க, பெண்கள் எல்லோரிடமும் நான் சகஜமாக பழகுவேன். இதனால் எனக்கு நிறைய ப்ரண்ட்ஸ் இருந்தனர்.

ஒரு நாள் வகுப்புக்கு சென்ற போது, எனது இருக்கை முன் உள்ள மேஜையில் ஒரு காதல் கடிதமும், ஒரு ரோஜாப்பூவும் இருக்கும். முதல் நாள் அதை பார்த்து பதட்டமாகிவிட்டேன்.

என் தோழியிடம் சொன்னபோது, “பெரிதுபடுத்தாதே விட்டுவிடு” என்றாள்.

ஆனால். அடுத்தடுத்த நாட்களிலும் இதே போல ரோஜாவும் காதல் கடிதமும் இருந்தது.

இதனால் பயந்து போய் எனது அம்மா, அப்பாவிடம் சொன்னேன். அவர்கள் பள்ளிக்கு வந்து முதல்வரிடம் புகார் செய்தார்கள். அவர் விசாரணை நடத்தி ஏழாம் வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவன்தான் தினமும் காதல் கடிதமும் ரோஜாப்பூவும் வைத்தவன் என்று கண்டுபிடித்தார். அவனை கடுமையாக திட்டி கண்டித்தார்.

அதன்பிறகு அவன் என் வழிக்கே வரவில்லை. என்னைப் பார்க்கும் போதெல்லாம் முகத்தை திருப்பிக்கொண்டு போய்விடுவான்” என்று சொல்கிறார் நயன்.

அது சரி.. அப்போ அவர் என்ன படிச்சிக்கிட்டிருந்தாராம் தெரியுமா..  மூன்றாம் வகுப்பு!

“அந்த வயதில் அவனுக்கு காதல் பற்றி என்ன தெரியும். அதை இப்போது நினைத்தாலும் எனக்கு வியப்பாக இருக்கிறது.” என்று இன்னமும் வியந்துகொண்டிருக்கிறார் நயன்!