அமையாத, “தி.மு.க. -தே.மு.தி.க.” கூட்டணி விவகாரம் ஓய்ந்தபாடில்லை. “கூட்டணி வைத்துக்கொள்ள விஜயகாந்துடன் பேரம் நடத்தியது தி.மு.கழகம். 80 சீட்டுகளும் 500 கோடி பணமும் தருவதாக கூறியது” என்று வைகோ குற்றம்சாட்ட, அவர் மீது கருணாநிதி வழக்கு தொடத்திருக்கிறார்.
ஆனால் “ஏதோ நடந்தது” என்று சந்தேகப்படும்படியாக தி.மு.க. தரப்பிலிருந்தே சில தகவல்கள் கசிந்தன. அதில் ஒன்று, “தி.மு.கவுடன் விஜயகாந்த் தரப்பினர் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தியபோது நடந்த விசயங்களை தேவைப்பட்டால் வெளியிடுவோம்” என்று சுப.வீரபாண்டியன் கூறியது.
கருணாநிதிக்கு மிக நெருக்கமானவரான சுப.வீ. இப்படி கூறியதும் தற்போது சர்ச்சையைக் கிளப்பியது. இது குறித்து சுப.வீயிடம் கேட்டோம்.
அவர், “நான் சொன்ன கருத்து தவறாக ஊடகங்களில் வந்துவிட்டது. பேரம் நடக்கவில்லை என்பது உண்மை. ஆனால் பேச்சுவார்த்தை நடந்திருக்கலாம். இல்லாவிட்டால் தி.மு.க. தலைவர் கலைஞற், “பழம் நழுவி பாலில் விழும்” என்று கூறியிருக்க மாட்டார்.
ஆனால் கூட்டணி அமையவில்லை. இனி பழைய விசயங்களை யாரும் பேச வேண்டியதில்லை என்று நான் கூறினேன். அந்த கருத்து, நான் ஏதோ ரகசியங்களை வெளியிடுவேன் என்பது போல ஊடகங்களில் வந்துவிட்டது. மற்றபடி எந்த ரகிசயத்தையும் வெளியிடுவதாக சொல்லவில்லை. எனக்கு எந்த ரகசியமும் தெரியவும் தெரியாது” என்று சிரித்தார் சுப.வீ.