டெஹ்ரான்

ரானில் கடந்த 13 ஆம் தேதி நடந்த தற்கொலைப்படை தாக்குதலின் பின்னனியில் பாகிஸ்தான் உள்ளதாக ஈரான் குற்றம் சாட்டி உள்ளது

சமீபத்தில் ஈரான் நாட்டில் நடந்த இஸ்லாமிய புரட்சியின் 40 ஆவது நினைவு தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு நடந்த ஒரு சில தினங்களுக்குள் அதாவது கடந்த 13 ஆம் தேதி அன்று ஈரான் நாட்டின் பாதுகாப்பு படையினர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடந்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டு எல்லை பகுதியை சேர்ந்த புரட்சியாளர்கள் ஒரு பேருந்தில் வெடி பொருட்களுடன் வந்து மோதியதில் சுமார் 27 படைக்குழுக்கள் அழிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஈரானில் நடந்த இந்த தாக்குதல் மிகவும் கொடூரமானது என கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் குறித்து அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரி முகமது அலி ஜபாரி, “இந்த தாக்குதல் மிகவும் கொடூரமானது. இந்த தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இஸ்லாத்துக்கு எதிரானவர்கள். அதை அறிந்துக் கொண்டே பாகிஸ்தான் அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

பாகிஸ்தானின் எல்லைப்பகுதியை சேர்ந்த ஜெயிஷ் அல் அதி என்னும் இயக்கம் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இந்த இயக்கத்துக்கு பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் உதவி வருகின்றனர்.

இந்த அமைப்பை பாகிஸ்தான் அரசு தண்டிக்காவிட்டால் நாங்கள் கடும் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம். அதன் பிறகு தீவிரவாத இயக்கத்தை ஆதரித்ததற்கான விளைவை பாகிஸ்தான் சந்திக்க நேரிடும்.” என தெரிவித்துள்ளார்.