புதுடெல்லி:
இந்நியன் ரயில்வேயின் இரு துறைகளுக்கு இடையே நடக்கும் சிறு பிரச்சினையால், பிரதமர் மோடி தொடங்கவிருந்த அதி வேக ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லியிலிருந்து வாரணாசி வரை மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் டிரைன்-18 அதி வேக ரயிலை, ஜனவரி 8&ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைப்பதாக இருந்தது. ரயில்வேயின் எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் துறைகளின் அனுமதி கிடைப்பதில் இழுபதி நிலவுவதால் தொடக்க விழா தள்ளப்போயுள்ளது.
ட்ரைன்-18 என்று பெயிரிடப்பட்டுள்ள் இந்த அதிவேக ரயில் சென்னையில் உள்ள ஐசிஎப் வடிவமைக்கப்பட்டது. சப்தர்ஜங் மற்றும் ஆக்ரா இடையே இந்த ரயிலை 180 கி.மீ வேகத்தில் இயக்கியபின், ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் சான்றிதழ் வழங்கினார். பயணிகள் பாதுகாப்புக்கு ஏற்றதாக இந்த ரயில் உள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் ஜெனரலின் சான்று இல்லாமல் இதற்கு அனுமதி தரமுடியாது என ரயில்வேயின் எலக்ட்ரிக்கல் துறை கூறுகிறது.
ரூ.100 கோடியில் உருவாக்கப்பட்ட இந்த அதிவேக ரயிலை இயக்குவதற்காக எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் ஜெனரலின் சான்று தேவையில்லை என ரயில்வேயின் மெக்கானிக்கல் துறை கூறுகிறது.
இப்படியே இழுபறி தொடர்வதால், இந்த ரயில் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மொராதாபாத் மற்றும் கோட்டா ரயில் நிலையங்களுக்கிடையே இந்த ரயிலின் சோதனை ஓட்டம் நடந்தது. ரயில்வேயின் வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் தர நிறுவன அதிகாரிகளும் இந்த சோதனை ஓட்டத்தை நேரில் ஆய்வு செய்தனர்.
எனினும். இரு துறைகளுக்கிடையேயான சிறு பிரச்சினை காரணாமாக அதிவேக ரயில் தொடக்கவிழா காண்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனினும் கும்பமேளாவுக்கு முன்பாக ட்ரைன்-18 ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.