தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அரசுகள் முந்தைய அரசின் திட்டங்களை மாற்றி பந்தாடும் நிலைக்கு ஒரு உதாரணம் அரியலூர் மாவட்டம்.
2001 அப்போதைய தி.மு.க. அரசு பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து அரியலூர் மாவட்டத்தை உருவாக்கியது. அடுத்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு பொருளாதார காரணத்தைக் கூறி, மீண்டும் அரியலூரை, பெரம்பலூர் மாவட்டத்துடன் சேர்த்தது.
பிறகு அடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு. 2007ம் ஆண்டு இதே நாளில் மீண்டும் அரியலூர் மாவட்டத்தை உருவாக்கியது. மீண்டும் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு இதுவரை இதில் மாற்றம் செய்யவில்லை.