தமிழின் ஆகச் சிறந்த இயக்குநர் என்று கொண்டாடப்படும் ருத்திரய்யா நேற்று காலமானார். இவரைப் பற்றி விக்கி பீடியாவில் காணக்கிடைக்கும் தகவல், நமது ரசனை குறித்தும், தமிழ்த் திரையுலகின் நிலை குறித்தும் ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன:
“1978ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் மாறுபட்ட ஒரு இயக்குனராக நுழைந்தவர் சி.ருத்ரைய்யா. இவரது முதல் படமான “அவள் அப்படித்தான்”, முன்னணி நட்சத்திரங்களான கமலஹாசன், ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்திருந்தபோதும், அவர்களிடமிருந்து வழமையாக ரசிகர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களைக் கொண்டிராது, வேறுபட்ட, உளவியல் தொடர்பான கதையைமைப்பைக் கொண்டிருந்ததால் தோல்வியுற்றது. இருப்பினும், இன்றளவும், தமிழில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது.
புதுமுகங்களை வைத்து 1980 ஆம் ஆண்டு சி.ருத்ரைய்யா இயக்கிய “கிராமத்து அத்தியாயம்” என்னும் திரைப்படமும் தோல்வியுற்றது.
இதன் பிறகு அவரது படம் எதுவும் வெளிவரவில்லை. சில முயற்சிகள் துவக்கத்திலேயே தோல்வியுற்று விட்டன.”