சென்னை

ன்று முக ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி அவர் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி உள்ளார்.

 

திமுக தலைவரும் முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் திமுக தலைவர் மகனுமான மு க ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுகிறார்.   மு க ஸ்டாலின் கடந்த 1953 ஆம் வருடம் மார்ச் 1 ஆம் தேதி பிறந்தவர் ஆவார்

முக ஸ்டாலின் பிறந்த நாளை திமுகவினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.   பல இடங்களில் திமுகவினர் மக்களுக்கு இனிப்பு வழங்கி வருகின்றனர்.   பல தலைவர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளனர்.

முக ஸ்டாலின் தனது பிறந்த தினத்தையொட்டி கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று வணங்கி மலர் தூவி தனது மரியாதையைச் செலுத்தி உள்ளார்.  மேலும் அவர் முன்னாள் முதல்வரும் திமுகவை தோற்றுவித்தவருமான அண்ணா நினைவிடத்திலும் மரியாதை செலுத்தி உள்ளார்.

[youtube-feed feed=1]