parthasarathy_2247920f

 

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரான நா.பா. என்று அழைக்கப்படும் நா.பார்த்தசாரதியின் நினைவுதினம் இன்று (1987)

தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் என்று பல புனைப்பெயர்களில் எழுதியவர்.

தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் ‘தீபம்’ நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். இவருடைய படைப்புகள் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களை கொண்டதாகும்.

இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு ஆகியன தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர். .. இவர் மொத்தம் 93 நூல்களை எழுதியிருக்கிறார்