நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம், தாய்த்தமிழகத்துடன் இணைந்த நாள் இன்று. இதற்காக நடந்த போராட்டங்கள், மக்கள் அனுபவித்த துயர்கள் கொஞ்சநஞ்சமல்ல.
மார்சல் நேசமணி, ரசாக், சிதம்பரநாதன் உட்பட பல தலைவர்கள், மக்களைத் திரட்டி கடும் போராட்டங்களை நடத்தினார்கள்.
நாஞ்சில் பகுதியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் தினமலர் நாளிதழை துவங்கினார் ராமசுப்பு.
அனைவரையும் நன்றியுடன் நினைவுகூற வேண்டிய நாள் இது.