உலக தொழிலாளர் உரிமைதினம் இன்று. தொழிலாளர்களக்கு அளிக்க வேண்டிய உரிய ஊதியம், பணி நேரம், அவர்கள் நடத்தும் முறை ஆகியவை பற்றி சிந்திக்க வேண்டிய நாள்.
உலகம் முழுதுமே தொழிலாளர் மீதான அடக்கு முறை நடந்துகொண்டே இருக்கிறது. கேத்ரீனா புயலை அடுத்து சீர்செய்யும் பணிக்காக அமெரிக்கா சென்ற தொழிலாளர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. குவைத் போன்ற அரபு நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெரும்பாலான தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக்கப்படும் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.
சரி, உலகம் இருக்கட்டும்… நம் தமிழ்நாடு எந்த நிலையில் இருக்கிறது?
, தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர், நீதிபதி முருகேசன் கூறவதைக் கேளுங்கள்
“தமிழகத்தில் எடுத்த கணக்கெடுப்பின்படி 10 லட்சம் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக உள்ளனர். அவர்களில், 65 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மாநில அளவில், துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாததால், கொத்தடிமைகளை மீட்பதில் தேக்கம் ஏற்படுகிறது.
கொத்தடிமை தொழிலாளர்களை மீட்பதில் இன்னொரு சிக்கலாம் இருக்கிறது.
அவர்களை மீட்பதோடு விட்டுவிடுகிறோம். மாற்று வேலை தருவதில் அக்கறை செலுத்துவதில்லை. ஆகவே அவர்கள் இருக்கும் வேலையையும் விட்டு மேலும் துயரப்படுகிறார்கள். பலர் மீண்டும் கொத்தடிமையாகவே போய்விடுகிறார்கள்.
. எனவே மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டும்!”
இதுதான் இன்றைய தொழிலாளர் நிலை. .!