1968ம் ஆண்டு இதே நாளில்தான் ஆப்பிரிக்க நாடான சுவாஸிலாந்து, இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்றது. தெற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் இந்த நாட்டின் கிழக்கே மொசாம்பிக் நாடும் மற்ற மூன்று பகுதிளில் தென்னாப்பிரிக்காவும் இருக்கின்றன.
இந்த நாடு பண்டு ஆதிவாசிகளைச் சேர்ந்த சுவாசி என்கிற பூர்வகுடி மக்களைக் கொண்டது. இதன் தலைநகரான உம்பானேயில் 67,200 பேர் வசிக்கிறார்கள்.
இந்நாட்டில் இயற்கை அளித்துள்ள தாதுப்பொருட்கள் நிறைய உள்ளன. ஆனால் அதன் வளங்களை முன்பு இங்கிலாந்தும், பிறகு ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளும் சுரண்டுவதால், ஏழை நாடாகவே இருக்கிறது.
ஆனாலு்ம் இந்நாட்டுக்கு ஒரு சிறப்பு… இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்ற கடைசி நாடு இது.