sss

முனிச்:

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப்போர் காரணமாக அந்த நாட்டு மக்கள், ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் தஞ்சமடைய விரும்புகிறார்கள்.  ஆனால் அந்த நாடுகள் அவர்களை ஏற்பதில்லை.

இந்த நிலையில் துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டின் மோஸ் தீவுக்கு அகதிகள் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்ததில், ஐந்து பச்சிளங்குழந்தைகள் உட்பட பலர் பலியாயானார்கள்.  அதில் அய்லான் என்ற பிஞ்சுக்குழந்தையின் உடல் துருக்கியில் கரை ஒதுங்கிது.  அந்த குழந்தையின் படம் ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து அகதிகள் பிரச்சனையில் ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டது.  இந்த நிலையில், ஹங்கேரியில் தவித்துக்கொண்டிருந்த அகதிகளை ஏற்பதற்கு ஆஸ்திரியாவும், ஜெர்மனியும் முன்வந்திருக்கின்றன.    அகதிகளை ஏற்பதற்கு தங்கள் எல்லைகளை இந்த நாடுகள் திறந்து விட்டிருக்கின்றன.

இதையடுத்து ஏராளமான அகதிகள் ஆஸ்திரியாவின் வியன்னா நகருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்களில் சென்றடைந்தனர். அங்கிருந்து அவர்கள் ரெயில்கள் மூலம் ஜெர்மனியின் முனிச் உள்ளிட்ட பிற நகரங்களுக்கு  செல்கிறார்கள். ஆஸ்திரியாவில் இருந்து முனிச் நகருக்கு அதிகாலை உள்ளூர் நேரப்படி 1.30 மணிக்கு கடைசியாக புறப்பட்ட ரெயிலில் சுமார் ஆயிரம் அகதிகள் பயணம் செய்தார்கள். எட்டு ஆயிரம்  அகதிகள் முனிச் நகருக்கு அகதிகளாக சென்று குவிவார்கள் என்று தெரியவருகிறது.