சென்னை

இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்றே குறைந்துள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய நாணயம் மதிப்பைப் பொறுத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன.    கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டிசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இதற்கு காரணம் கச்சா எண்ணெய் விலை உயர்வு எனக் கூறப்பட்டாலும் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படவில்லை.    ஆனால் தேர்தல் நேரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சிறிதும் உயர்த்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சமீபத்தில் தமிழக அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது.   இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூ. 0.15 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.99.32 என விற்பனை ஆகிறது.  டிசல் விலை ரூ.0.18 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.93.66 என விற்கப்படுகிறது.