
அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும், நாளை வெளியாகும் என கடந்த 3 நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் இன்று மதியம் 12.15 மணிக்கு அதிமுக ஆதரவு தொலைக்காட்சியான ஜெயா டி.வியில் சிறப்பு செய்தி நேரலையாக ஒளிபரப்பாகும் என திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்தான் அப்போது வெளியாகும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறப்பு செய்தி வெளியான பிறகுதான் அதிமுக வேட்பாளர் பட்டியலா? அல்லது ஜெயலலிதா பேட்டி அளிக்கிறாரா என்பது தெரிய வரும்.
இன்று அதிமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வரப்போகிறது. அதனால நேர்காணல் போனவர்கள் கோயில்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள் என்று பரபரப்பாக உள்ளனர். ஆனால் கட்சித் தலைமை என்ன முடிவில் உள்ளதோ?
Patrikai.com official YouTube Channel