தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஆன் லைனில் எப்ஐஆர் பதிவு செய்யும் முறை அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் 1,482 காவல் நிலையங்களில் ‘ஆன்லைன் மூலம் எப்ஐஆர் பதிவு செய்யும் முறை, ஏப்ரல் 15ம் தேதி முதல் துவங்குகிறது. இதற்கான அனைத்து பணிகளும் முடிந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் உள்ள தலைமை எழுத்தர், ஏட்டு மற்றும் போலீசாருக்கு கம்ப்யூட்டரில் எப்ஐஆர் பதிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
கையால் எழுதும் எப்ஐஆருக்கு ஏ3 பேப்பர் உபயோகப்படுத்தப்பட்டது. தற்போது ஆன்லைன் எப்ஐஆருக்கு தமிழக அரசு முத்திரையுடன் கூடிய பிரத்யேகமான ஏ4 பேப்பரில் பிரின்ட் எடுத்து நீதிமன்றத்திற்கு வழங்கப்படவிருக்கிறது.
Patrikai.com official YouTube Channel