1

ஜேம்ஸ்பாண்ட்  பட வரிசையில் தற்போது வெளியாகி உலகம் முழுதும் சக்கைபோடு போட்டுவரும் படம்  ஸ்பெக்டர். ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடிக்கும், டேனியல் கிரேக், நடிகைகளுக்கு நீண்ட நேரம் உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்திருக்கும் காட்சிகள், உலகெங்கிலும் ரசித்து (!) பார்க்கப்படுகிறது.

 

2

இந்த நிலையில் இந்தியாவிலும் ஸ்பெக்டரை ரிலீஸ் செய்ய, இங்கே சென்சாருக்கு அனுப்பினார்கள்.   பாண்ட் கொடுக்கும் லிப்ஸ் லாக் முத்த காட்சிகளை எல்லாம் வெட்டி வீசிவிட்டது நம்ம சென்சார். அதோடு படத்துக்கு யு/ஏ சர்ட்டிபிகேட் கொடுத்துவிட்டது.

சென்சார்போர்டின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

 

ஒரிஜினல் ஜேம்ஸ்.. முத்தமிடும் முன்பு
ஒரிஜினல் ஜேம்ஸ்.. முத்தமிடும் முன்பு

சென்சார் வாரியம், இந்துமயமாகிவிட்டதாக கருத்துரிமைவாதிகள் சமூக வலைத்தளங்களில் கருத்து கூறிவருகிறார்கள். எழுத்தாளரும், இயக்குநருமான, ஷ்ரிஷ் குண்டர், “ஜேம்ஸ்பாண்ட் உலகை காப்பாற்றுவார். ஆனால் ஜேம்ஸ்பாண்டை இந்திய சென்சார் போர்டிடம் இருந்து காப்பாற்றமுடியவில்லை” என்று  கிண்டலடித்திருக்கிறார்.

இப்போது கருத்துரிமைவாதிகள், ஜேம்ஸ்பாண்ட் இந்துமயமாக்கப்பட்டுகிறார் என்கிற பொருள் பட கிண்டலான கிராபிக்ஸ் படங்களை பகிர்ந்துவருகிறார்கள்.