திருவனந்தபுரம்
இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி முழுமையாகக் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார்.
கடந்த 14 ஆம் தேதி அன்ற் இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு முதன் முதலாக உறுதி செய்யப்பட்டது. கேரளா மாநிலம் வயநாட்டுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட 35 வயதான குரங்கு அம்மை பாதித்த நபர் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் நோய்த்தொற்றில் இருந்து முழுமையாக குணம் அடைந்ததையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
அவருடைய மாதிரிகள் 72 மணி நேர இடைவெளியில் இருமுறை பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் இரண்டுமே நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளதாகவும் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்கள், தொடர்பில் இருந்தவர்களுக்கு நோய்த்தொற்று கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.