புதுடெல்லி:
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக மந்த நிலையில் இருப்பதற்கு மதவாத செயல்பாடுகளே காரணம் என, வெளிநாட்டு விவகார ஆய்வாளர் ஃபாரித் ஜக்காரியா கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோ நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட அவர் தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், உலக அளவில் ஒப்பிடும்போது, பொருளாதார வளர்ச்சியில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா பின்தங்கியுள்ளது.
சீனாவில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது. தொழில் நுட்பம் போன்றவற்றில் சீனா முக்கியத்துவம் கொடுத்துள்ளது. ஆனால் இந்தியா எதையும் செய்யவில்லை. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையிலேயே உள்ளது. பொருளதார வளர்ச்சி வர்த்தகத்தை மட்டும் சார்ந்ததல்ல. குறிப்பிட்ட அரசின் கொள்கைகளாலும் பொருளாதார வளர்ச்சியில் தேக்கம் ஏற்படும். இந்துத்வா அரசியல் காரணமாகவே இத்தகைய தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.
அரசின் இத்தகைய கொள்கை, பெரும்பான்மை இந்துக்களையும் சிறுபான்மை மக்களையும் பிரித்துவிடும். இந்தியாவில் முஸ்லிம்களும், இதர சிறுபான்மை மக்களும் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்றார்.