Gatiman-Express-Interior-View
டெல்லி இல் இருந்து ஆக்ரா செல்ல இனி 100 மணி துளிகள் போதும். இந்தியவின் “செமி புல்லெட் ” என்று அழைக்கப்படும் கதிமன் விரைவு ரயில் ஏப்ரல் 5 இல் தனது சேவையை தொடங்க போகிறது. இந்த சேவையை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தனது அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் நாட்டிற்கு அர்பணிக்கிறார்.
இந்த ரயில் நாட்டில முதல் முறையாக 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்த ரயிலில் அனைத்து சேவையும் தனியார் மூலம் செய்யப்படும்.
இந்த ரயிலில் பதிமூன்று உயர் ரக சேவை பெட்டிகள் இருக்கும். நான்கு வகை உணவு இதில் பரிமாறப்படும். பயண சீட்டு பரிசோதனை முதல் அனைத்தும் தனியார் அமைப்பு கையாளும்.