மும்பை

ஸ்திரேலியாவுடனான ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 கான இந்திய அணி விரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி 20 மற்றும் ஒரு நாள் போட்டியில் விளையாட உள்ளது. இதில் டி 20 போட்டிகள் இந்த மாதம் 24 ஆம்தேதி மற்றும் 27 ஆம் தேதி டி 20 போட்டிகள் நடைபெற உள்ளன. ஒரு நாள் பொட்டிகல் மார்சி 2 முதல் 13 வரை நடைபெர உள்ளது. இந்த இரு போட்டிகளுக்குமான இந்திய அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதில் டி-20 தொடருக்கான இந்திய அணியின் பட்டியிலில் விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், எம்.எஸ். தோனி, ஹர்திக் பாண்டியா, க்ருனல் பாண்டியா, விஜய் சங்கர், சாஹல், பும்ரா , உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், மாயங்க் மார்கண்டே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

முதல் இரண்டு ஒரு நாள் போட்டியில் விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, முகமது ஷமி, சாஹல், குல்தீப் யாதவ், விஜய் சங்கர், ரிஷப் பண்ட், சித்தார்த் கவுல், கே.எல்.ராகுல் ஆகியோர் விளையாடுகின்றனர்.

கடைசி மூன்று ஒரு நாள் போட்டிக்கான பட்டியலில் விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, புவனேஸ்வர் குமார், சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, விஜய் சங்கர், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்