
தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை குற்றச்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்கள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஜெயலலிதாவின் கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் எவ்வித விதிமுறைகளையும் விதிப்பதில்லை. தேர்தல் ஆணையர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என கண்டனம் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel