amitabh-bachchan-post_1356587692

நடிகர் அமிதாப் பச்சனின் டுவிட்டர் பக்கத்தில் ஆபாச படங்கள் பகிரப்பட… அதிர்ந்து போனார்கள் ரசிகர்கள். “ எனது கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. யாரோ விஷமிகள் என் ஆபாச படங்களை பகிர்ந்துவிட்டார்கள்” என்று நொந்துபோய் சொன்னார் அமிதாப்.

அதற்குள் அடுத்த சர்ச்சை!

கடந்த ஒரு வருடமாக தன்னை ஆபாசமாக திட்டி எஸ்.எம்.எஸ். வந்துகொண்டு இருப்பதாகவும், உடனே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மும்பை காவல்துறையில்  புகார் கொடுத்துள்ளார்.

மும்மை ஜுஹூ காவல் நிலையத்தின்  காவல் ஆய்வாளருக்கு அமிதாப் எழுதியுள்ள கடிதத்தில், “ஆபாசமான வார்த்தைகளில் எஸ்.எம்.எஸ். செய்திகள் எனது தனிப்பட்ட போனுக்கு அனுப்பப்பட்டு வந்துள்ளன. அந்த செய்திகளை தாங்கிய, வாசகங்களின் புகைப்பட நகல்களை இதனுடன் இணைத்திருக்கிறேன். இது குறித்து விசாரணை செய்து,  குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கறார்.

பிரபலம்னாலே பிராப்ளம்தான் போலிருக்கு!