வாஷிங்டன்:
ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அடிப்படை காரணங்கள், அறிகுறி, வெளிப்பாடு ஆகியவை வேறுபடுகிறது என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கன் இருதய சங்கத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், பொதுவாக இருதய தமணிகளில் ஏற்படும் அடைப்பு காரணமாக தான் ஆண், பெண் இருபாலருக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தம் உறைதல் மூலம் பெண்களுக்கு ஏற்படும் இந்த அடைப்பு, ஆண்களில் இருந்து வேறுபடுகிறது. சிகிச்சை மூலம் ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர்.
ரத்த கண்ணி குழாயில் பெண்களுக்கு குறைந்த கடுமையான அடைப்புகள் ஏற்படுகிறது. இதனால் சிகிச்சை முறையை மாற்றி அமைக்க வேண்டி உள்ளது.
பொதுவாக இரு பாலருக்கும் நெஞ்சு வலி மூலம் மாரடைப்பின் அறிகுறி தெரியும். ஆனால் பெண்களுக்கு மட்டும் மூச்சு திணறல், குமட்டல் அல்லது வாந்தி, பின்புறம் அல்லது தாடை வலி ஏற்படும். வெள்ளை நிற பெண்களை விட அனைத்து வயது கறுப்பு நிற பெண்களுக்கு உயர் மாரடைப்பு நிகழ்வு ஏற்படுகிறது.
மாரடைப்பு காரணமாக மருத்துவமனைகளில் இளம் கறுப்பின பெண்களின் இறப்பு சதவீதம் அதிகமாக உள்ளது. கறுப்பு மற்றும் ஸ்பானிஷ் மொழி பேசும் தென் அமெரிக்க கறுப்பின பெண்களுக்கு இருதயம் தொடர்புடைய சர்க்கரை நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்றவை மாரடைப்பின் போது அதிகம் ஏற்படுகிறது. ஸ்பானிஷ் மொழி பேசாத வெள்ளை நிற பெண்களுக்கு இது போன்றவை சற்று குறைவாக தான் இருக்கிறது. இத்தகவல் மருத்து இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.