
சென்னை:
அ.தி.மு.க.வைச் சேர்ந்த பழ.கருப்பையா துறைமுகம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்நிலையில், அவரை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பழ.கருப்பையா கட்சியின் கொள்கை-குறிக்கோள், கோட்பாட்டிற்கு முரணான வகையில் பழ.கருப்பையா செயல்பட்டதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
“ஆளுங்கட்சியினர் நாற்பது சதவிகிதம் கமிசன் வாங்குகிறார்கள்” என்று பழ. கருப்பையா பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதன் பிறகு நாளிதழ் ஒன்றில், ஆளும் தரப்பினர் செய்யும் ஊழல் குறித்து அவர் எழுதியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் பொதுவாக அதிகாரவர்க்கத்தினர் பற்றி பேசினாலும், “இப்படி எல்லாம் பேசுபவர் எப்படி அதிமுகவில் நீடிக்கிறார்” என்ற ஆச்சரியமும், சந்தேகமும் அனைவரிடமும் ஏற்பட்டது.
சமீபத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவிலும், பதவியில் இருப்பவர்கள் குறித்து அவர் பேசியது கொஞ்சம் அதிகப்படியாகவே இருந்தது. “பதவியில் இருப்பவர்கள் சின்னவீட்டுக்கு கூட சைரன் வச்ச காரில்தான் போகிறார்கள்” என்று அவர் பேசியது குறித்து உளவுத்துறையினர் உடனடியாக மேலிடத்துக்கு தகவல் அனுப்பினார்கள். இதையடுத்து “இனியும் பொறுப்பதில்லை” என்று மேலிடம் நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று பேசப்படுகிறது.
பழ.கருப்பையாவை கட்சியிலிருந்து நீக்க வைத்த அந்த ஆடியோ லிங்க்..
Patrikai.com official YouTube Channel