Akshara_0
 
கேரள மாநிலம் கண்ணூரில் இருக்கும் WIRAS கல்லூரியில் பயிலும் அக்க்ஷரா மீண்டும் கல்லூரிக்குச் செல்லும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
HIV Positive நிலை உடைய அக்க்ஷரா பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால் பள்ளியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். அவர் அம்மா ரினாவின் ஓராண்டு போராட்டத்துக்குப் பின் அவர் பள்ளியில் சேர்த்துக்கொள்ளப் பட்டார். இப்போது மீண்டும் கல்லூரியில் அதே பிரச்சனை
அவரது HIV Positive நிலையை காரணம் காட்டி கல்லூரி நிர்வாகம் அவரை விலக்கி வைத்துள்ளது
கடந்த ஜனவரி 26ம் தேதி அக்க்ஷராவின் வீட்டுக்கு வந்த இரு ஆசிரியர்கள், அவருடன் ஹாஸ்டலில் தங்கி இருக்கும் இரு மாணவிகள் இவரின் நிலையை காரணம் காட்டி கல்லூரி விடுதியில் இருந்து வெளியேறியதாகச் சொல்லப்பட்டது. அன்றிலிருந்து அக்க்ஷராவை முதியோர் மற்றும் மனநலம் குன்றியவர் தங்கும் விடுதிக்குச் செல்லுமாறு அவ்விரு ஆசிரியர்களும் கூறியிருக்கின்றனர்.
கல்லூரியில் படிக்கும் பெரும்பான்மையான மாணவிகளுக்கு தன் நிலைமை தெரியும் என்றும் யாரும் தன்னை விலக்கி வைப்பதில்லை என்றும் கூறுகிறார். அக்க்ஷரா. மாவட்ட ஆணையர் பாலகிரன் கல்லூரி நிர்வாகத்துக்கு அக்க்ஷராவை மீண்டும் கல்லூரியிலும் விடுதியிலும் சேர்க்க ஆணையிட்டுள்ளார். அதற்கு கல்லூரி நிர்வாகம் வியாழன் வரை அவகாசம் கேட்டுள்ளது..
வியாழன் அன்று அழைப்பு வருமா என்று காத்திருக்கிறார் அக்க்ஷரா..