பெண் என்கிற படைப்பே அழகுதான். ஆனால் மேலும் அழகு அழகு குறிப்பு இயற்கையான முறையில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய உடலழகைப் பேண முடியும்.
நகம்..
பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து தினமும் இரவு உறங்கப்போகும் முன்பு அருந்துங்கள். நகங்க கூடுதல் பலமடைவதோடு, உடைவதும் குறையும்.
தவிர, பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வரலாம். இதனால் நகங்களுக்கு கூடுதல் பளபளப்பு கிடைக்கும்.
இதழ்…
கடையில் விற்கும் கெமிக்கல் லிப்ஸ்டிக் தேவையே இல்லை. பீட்ரூட்டை வெட்டி லிப்ஸ்டிக் பூசுவதைப் போல அழுத்தி தேய்த்து வந்தாலே செய்வாய் இதழ்கள் பெறுவீர்கள். .
முகம்..
நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவுங்கள். அல்லது, பயத்தம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து, முகத்தில் பூசி வாருங்கள். பொலிவான முகத்தோடு உலாவரலாம்.
கழுத்து…
கொஞ்சமாக ரோஸ்வாட்டர், அதே அளவு வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு… இதோடு கொஞ்சமாய் பயத்த மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசுங்கள். பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ் செய்துவிடுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வந்தீர்களானால், ஒரே வாரத்தில் கழுத்தும் கருமை நிறம் நீங்கி பள பளக்கும்.
சருமம்…
ஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோஸ் இலையின் சாறு எடுத்து கலந்துகொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வந்தால், சூரிய ஒளியால் கருமை அடைந்த தோலின் நிறம் பளிச் ஆகும்.
- அகிலா பரந்தாமன்