
திமுக குறித்து அவ்வப்போது அணுகுண்டு போல் வீசிய சில கருத்துக்களால் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு திமுக பற்றியும், மு.க.ஸ்டாலின் பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.
அழகிரி மீண்டும் திமுகவில் இணைகிறார் என்று செய்தி வரும்போதெல்லாம், திமுகவை பற்றி விமர்சனம் செய்வார் அழகிரி. இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு மு.க.அழகிரி கோபாலபுரம் வீட்டிற்கு சென்றார். தனது தாயார் தயாளுஅம்மாளை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர் தந்தை கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்துவிட்டு புறப்பட்டார்.
வெளியே வந்த அழகிரி, ‘‘தலைவர் உடல் நிலை பற்றி விசாரித்தேன்’’ என்று கூறிவிட்டு சென்றார்.
அழகிரி – கருணாநிதி சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, ‘’அழகிரி, கலைஞரை சந்தித்ததில் எந்த அரசியல் முக்கியத்துவமோ, கட்சி சார்ந்த விஷயமோ இல்லை. அவர் தனது தாய், தந்தையை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து விட்டு சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. இதை வீணாக பெரிதாக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.
Patrikai.com official YouTube Channel