அகத்திக்கீரை: ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை நீக்கும்
காசினிக்கீரை: சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் சூட்டை தணிக்கும்.
சிறுபசலைக்கீரை: சரும மற்றும் பால்வினை நோய்களைப் போக்கும்.
பசலைக்கீரை: தசைகளை உறுதியடையச் செய்யும்.
கொடிபசலைக்கீரை: பெண்களுக்கு வெள்ளைப்படுதலை நீக்கும், நீர் கடுப்பை நீக்கும்.
மஞ்சள் கரிசலை: கல்லீரலை சிறப்பாக செயல்பட வைக்கும், மஞ்சள்காமாலையை போக்கும்.
குப்பைகீரை: செரிமானத்தை இயல்பாக்கி, பசியைத்தூண்டும்
அரைக்கீரை: ஆண்மைக் குறைவைப்போக்கும்
புளியங்கீரை: ரத்த சோகையை போக்கும் பார்வைக் கோளாறுகளை நீக்கும்
பிண்ணாருக்குகீரை: வெட்டை நோய், நீர்கடுப்பை போக்கும்.
பரட்டைக்கீரை: பித்தம், கபம் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கும்
பொன்னாங்கன்னி கீரை: உடலையும் கண்ணையும் பெலிவுபெறச் செய்யும்,
சுக்கா கீரை: ரத்த அழுத்தத்தை சரி செய்யும், சிரங்கு மூலத்தை குணமாக்கும்
வெள்ளை கரிசலைக்கீரை: ரத்தசோகையை போக்கும்.
முருங்கைக்கீரை: நீரிழிவிலிருந்து காக்கும், கண்ணும் உடலும் பலம்பெறும்.
வல்லாரை கீரை: மூளைக்கு பலம் அளிக்கும்.
முடக்கத்தான்கீரை: கை, கால் முடக்கம் போக்கும், வாயுத்தொல்லை விலகும்.
புண்ணக்கீரை: சிரங்கும், சீதளமும் குணமாகும்.
புதினாக்கீரை: ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரண கோளாறுகளை தீர்க்கும்.
நஞ்சுமுண்டான் கீரை: நஞ்சை முறிக்கும்.
தும்பைகீரை-: சோர்வு, சோம்பல் போக்கும்.
கல்யாண முரங்கைகீரை: சளி, இருமலை போக்கும்.
முள்ளங்கிகீரை: நீரடைப்பை குணமாக்கும்.
பருப்புகீரை: பித்தம் போக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
புளிச்சகீரை: கல்லீரலை உறுதியாக்கும், மாலைக்கண் நோயை போக்கும், ஆண்மையை பெருக்கும்.
மணலிக்கீரை: வாதத்தை போக்கும், கபத்தை நீக்கும்.
மணத்தக்காளி கீரை: வாய் மற்றும் வயிற்றுப்புண்களை தீர்க்கும், தேமலை நீக்கும்.
முளைக்கீரை: பசியை உண்டாக்கும், நரம்பு உறுதியாகும்.
சக்கரவர்த்தி கீரை: தாது பலம் அதிகரிக்கும்.
வெந்தயக்கீரை: மலச்சிக்கலை போக்கும், மண்ணீரல், கல்லீரலை உறுதியாக்கும். வாத, காச நோய்களில் இருந்து காக்கும்.
தூதுவலை: ஆண்மைக் குறைவோப் போக்கும் சருமநோயை நீக்கும். சளித்தொல்லையை போக்கும்.
தவசிக்கீரை: இருமலை தொல்லையில் இருந்து விடுபடலாம்
சாணக்கீரை: உடலில் காயம் ஏற்பட்டால் விரைவில் ஆற்றும்.
வெள்ளைக்கீரை: தாய்பாலை பெருகும்.
விழுதிக்கீரை: ஜீரண கோளாறுகளை நீக்கும்.
கொடிகாசினிகீரை: பித்தம் போக்கும்.
துயிளிக்கீரை: வெள்ளை வெட்டை தொல்லையை நீக்கும்.
துத்திக்கீரை: வாய், வயிற்றுப்புண்களை போக்கும். வெள்ளை படுதல் நிற்கும்.
காரகொட்டிக்கீரை: மூலநோயை நீக்கும். சீதபேதியை நிறுத்தும்.
மூக்கு தட்டைகீரை: சளியைத் தொல்லையை போக்கும்.
நருதாளிகீரை: தாது விருத்தியாகும் வாய்ப்புண் போக்கும்.
– விலாசினி