pitt1
யாருக்குத்தான் என்றும் இளமையுடன் மார்கண்டேயராக இருக்க ஆசையிருக்காது? மனிதர்களின் ஓய்வுபெற்ற வயதான செல்களை உடம்பிலிருந்து எடுத்தால், மீண்டும் அவர்கள் இளமையுடனும் புத்துனர்ச்சியுடனும் இருப்பார்கள் என்று மேயோ மருத்துவ கல்லூரியில் விஞ்ஞானிகளாக பணிபுரியும் டாரென் பேகர் மற்றும் ஜான் வான் டூர்சென் கூறியுள்ளனர்.
அவர்களின் கண்டுபிடிப்பை வடக்கு காரோளினாவின் பல்கலைகழகத்தைச் சேர்ந்த நோர்மன் ஷார்ப்லேஸ் என்பவர் ” நான் மிகுதிப்படுத்தி கூறவில்லை, இவர்கள் செய்யும் ஆராய்ச்சி வயதாவதை குறைக்க வல்ல ஒரு வியத்தகு கண்டுபிடிப்பு. இப்போதுள்ள காலகட்டத்தில் எவரும் மருந்து எடுத்துக்கொண்டு ஒரு வியாதியை குணப்படுத்த முற்படுவதில்லை. மக்கள் எழிய வழியையே விரும்புகின்றனர்” எனக் கூறியுள்ளார்.
இதைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்களை பேட்டி எடுத்த போது, “தாம் செய்துகொண்டிருந்த ஆராய்ச்சியில் ஒரு எலிக்கு தவறுதலாக BubR1 என்ற மரபணுவை நீக்கிய பிறகு, அந்த எலி மிக விரைவாக வயதாகி இறந்தது என்றும். பிறகு அந்த மரபணுவை பற்றி அதிகமாக ஆராய்ச்சி செய்து, அதை தனிமைப் படுத்தி முறையாக எடுக்கக் கற்றுக்கொண்டதாகவும்” விளக்கியுள்ளனர்.
எந்த ஒரு கண்டுபிடிப்புலும் இருக்கும் கேள்விகள் இதிலும் இருக்கின்றது. மக்களுக்கு எவ்வளவு பயனோ, அவ்வளவு பாதிப்பும் இருக்கும் என்கின்றனர் சிலர்.  டாரென் பேகர் மற்றும் ஜான் வான் டூர்சென், முதலில் இந்த அணுகுமுறையை கீல்வாத நோயை குணப்படுத்த முடியுமா என்று ஆராச்சி செய்ய இருப்பதாகக் கூறியுள்ளனர்.