இனிமேல் எவரேனும் உங்களை சாக்லேட் சாப்பிடக்கூடாது என்று கூறினால், அவர்களுக்கு இந்த பதிவை காட்டுங்கள். ஒரு புதிய ஆய்வில், மூளை நன்கு வேலை செய்ய நீங்கள் செய்யவேண்டிய காரியங்களில் ஒன்று தினசரி சாக்லேட் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்வது என்று கண்டறியப்பட்டுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியா, மெயின் பல்கலைக்கழகம் மற்றும் லக்சம்பர்கில் உள்ள சுகாதாரப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், பிற உணவுப் பழக்கம் எதுவாக இருந்தாலும் சாக்லேட் சாப்பிடுவது அறிவாற்றலை மேம்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அடிக்கடி சாக்லேட் சாப்பிடுவது நினைவாற்றலைக் கணிசமாக அதிகரிக்கும், செயல்திறனை சிறந்த முறையில் சீர்படுத்தும். சாக்லேட் சாப்பிடுவர்களின் இதயம் சிறப்பாக செயல்படுவதால், அவர்கள் மேலும் பல ஆண்டுகள் நன்கு வாழ வழி உண்டு என்று கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
ஜுரம் குறைக்க, குழந்தைகளின் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த, பெண்களுக்கு ஏற்படும் புகார்கள், தாய்பால் உற்பத்தியை அதிகரிக்க, தூக்கத்தை சீர்படுத்த, இவை அனைத்திற்கும் சாக்லேட் சாப்பிடுவது நிவாரணமளிக்கும் என்றும் இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கரும்பு தின்ன கூலியா? முன்பெல்லாம் வெறும் சுவைக்காக சாக்லேட் சாப்பிட்ட நாம் இனிமேல் அறிவாற்றலைப் பெருக்க சாக்லேட் சாப்பிடலாம்.