amma
அரசு விளம்பரங்களில் முதலமைச்சர் , அமைச்சர் படங்கள் பிரசுரம் ஆவது சுய விளம்பரம் தேடிக்கொள்வது என்றும், இதனால் மாநில அரசுகளுக்கு பணம் விரயம் ஆகிறது என்றும் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட் தனது தீர்ப்பில், பிரதமர், ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி படங்கள் மட்டுமே பிரசுரம் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்திருந்தது. முதலமைச்சர் படங்கள் பிரசுரம் செய்ய அனுமதி மறுத்தது.
இதற்கு எதிராக தமிழகம் உள்பபட பல்வேறு மாநில அரசுகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசு விளம்பரங்களில் முதல்வர், கவர்னர், மாநில அமைச்சர்கள் படம் பெறலாம் என அனுமதி வழங்கியுள்ளது.