டில்லி:
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தில் ரத யாத்திரை இன்று பிற்பகல் தொடங்குகிறது. இந்த யாத்திரையை விசுவ இந்து பரிசத் அமைப்பினர் மேற்கொள்கின்றனர்.
இன்று மாலை தொடக்க உள்ள ரத யாத்திரையை உ.பி. முதல்வர் யோகி கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். அயோத்தியில்உள்ள கரசேவக்புரத்தில் இருந்து இன்று மாலை ராம ராஜ்ஜியம் ரத யாத்திரை தொடங்குகிறது.
இந்த யாத்திரை உ.பி.யில் இருந்து 6 மாநிலங்கள் வரியாக வந்து அடுத்த மாதம் (மார்ச்) 25ந்தேதி ராமேஸ்வரம் வந்தடைகிறது.
எற்கனவே ராமஜென்மபூமி வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் விஎச்பி ரத யாத்திரை மேற்கொள்ளப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.