டொனால்டு டிரம்ப், ஹிலாரி கிளன்டன்
டொனால்டு டிரம்ப், ஹிலாரி கிளன்டன்

வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட டொனால்டு டிரம்ப், ஹிலாரி கிளன்டன் ஆகியோருக்கு பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக 7 மாகாணங்களில் நடைபெற்ற ஓட்டெடுப்புகளில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் வெற்றி பெற்றனர்.
அலபாமா, ஆர்கன்ஸாஸ், வெர்மான்ட், வர்ஜீனியா, ஜார்ஜியா, மாஸசுனஸட்ஸ், டென்னஸீ ஆகிய 7 மாகாணங்களில் ஒரே நேரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஓட்டெடுப்பு நடந்தது. இதில் இவர்கள் இருவரும் வெற்றி பெற்றதால், அதிபர் தேர்தலில் இருவரும் போட்டியிடுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. எனினும், அதிபர் தேர்தலில் தங்களது கட்சி சார்பிலான வேட்பாளாரகத் தேர்வு செய்யப்படுவதற்கு இந்த வெற்றிகள் போதாது என டொனால்டு டிரம்ப், ஹிலாரி கிளிண்டன் ஆகிய இருவருமே தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரி (68), கடந்த 2008-ஆம் ஆண்டு நடந்த வேட்பாளர் தேர்வுப் போட்டியில், தற்போதைய அதிபர் ஒபாமாவிடம் தோல்வியடைந்த வர்ஜீனியா மாகாணத்தில், இந்த முறை வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.