புதுடெல்லி:

வரும் 8-ம் தேதி அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ‘பாபுக்’ புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வெள்ளியன்று தாய்லாந்தில் ‘பாபுக்’ புயல் தாக்கிய பின் கரைபுரண்டோடும் வெள்ளம்.

இது குறித்து இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;
தாய்லாந்தில் உள்ள வளைகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து உருவாகும் ‘பாபுக்’ புயல் ஜனவரி 8-ம் தேதி அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரையை கடக்கும்.
இதனையொட்டி, அந்தமான் தீவுகள், கடல் பகுதி மற்றும் வங்கக் கடலின் கிழக்கு மத்திய பகுதி மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் ஜனவரி 7-ம் தேதி முதல் கடல் சீற்றத்துடன் காணப்படும்.
‘பாபுக்’ புயல் மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.