rajasekar-asa-sankarapuram
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஏ.எஸ்.ஏ. ராஜசேகர் ( வயது 51), தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். ராஜசேகர் தனது சொந்த ஊர் செல்லம்பட்டு பகுதியில் நேற்று வாக்கு சேகரித்தார். அவருடையை சித்தியும் வாக்கு சேகரித்தார்.
இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில், 8 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிரடியாக மாற்றம் செய்து அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார்.
ஜெயா டிவியில் இந்த செய்தி ஒளிபரப்பானதுமே, அதிமுகவினர் வட்டாரத்தில் பதட்டம் அதிகரித்தது. மாற்றப்பட்டியலில் யார் யார் என்று பதைபதைப்போடு பார்த்துக்கொண்டிருந்தனர். சங்கராபுரம் ராஜசேகர் மாற்றம் செய்யப்பட்டார் என்றும், அவருக்கு பதில் அமைச்சர் ப. மோகன் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், ராஜசேகரின் சித்தி அதிர்ச்சி்யில் மரணம் அடைந்தார் என்று தகவல் வருகிறது. இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜசேகரின் அண்ணன், உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மேலும், ராஜசேகர் மாற்றம் செய்தியை கேள்விப்பட்ட, சங்கராபுரம் தொகுதிக்கு உட்பட்ட கரடி சித்தூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெங்கட்ராமன் அதிர்ச்சியில் மரணம் அடைந்துவிட்டார் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.