திருநெல்வேலி
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுக வுடன் கூட்டணி குறித்து பதில் அளித்துள்ளார்

வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இப்போதிருந்தே பல கட்சிகள் பல முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அவ்வகையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது/
நேற்று திருநெல்வேலியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம்,
கடந்த தேர்தலில் நாங்கள் அதிமுக கூட்டணியில் இருந்தோம். தற்போது அதிமுக பாஜவோடு கூட்டணி வைத்துள்ளது. தேர்தலுக்கு இன்னமும் 10 மாதங்கள் உள்ளது. வரும் டிசம்பரில் நடக்கும் மாநில மாநாட்டிற்கு பிறகு கூட்டணி குறித்து முடிவெடுப்போம்.
அதிமுக கூட்டணியில் நான்கைந்து கட்சிகள் இருந்தன. கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை நடத்தாமல், அவர்கள் பாஜவோடு கூட்டணியில் இணைந்து விட்டனர். எங்கள் மாநாட்டில் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை தெளிவாக அறிவிப்போம்.
என்று தெரிவித்தார்.