velmurugan
தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு அதிமுகவில் ஒரு இடம் கூட ஒதுக்கவில்லை. இதையடுத்து இன்று அக்கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய வேல்முருகன், ’’அதிமுக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தொகுதிகள் ஒதுக்குவது குறித்து அம்மாவை சந்தித்துப் பேசுங்கள் என்றார்கள். சந்திக்கிறேன் என்றேன். அப்போது அவர்கள் கடிதம் கொடுக்க சொன்னார்கள். கடிதம் கொடுத்தேன். 11 தொகுதி கேட்டு இல்லை என்றார்கள். 9 தொகுதிகள் கேட்டு இல்லை என்றார்கள். 6 தொகுதிகள் கேட்டு இல்லை என்றார்கள். கடைசியாக தமிழகத்தில் 5 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என கேட்டேன். எந்த பதிலும் சொல்லவில்லை. நான் அதிமுகவைத் தவிர வேறு எந்தக் கட்சியிலும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. திடீரென தொலைக்காட்சியில் வேல்முருகன் கட்சிக்கு சீட் இல்லை என்று செய்தி வெளியாகிறது. நாங்கள் எதைப்பற்றியும் கவலைப்படப்போவதில்லை’’என்றார்.
அவர் மேலும், ‘’ 2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உறுப்பினர்கள் காலடி எடுத்து வைப்பார்கள்’’ என்றார்.