சென்னை
சென்னை அண்ணா பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14 முதல் தொடங்க உள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்களில் கொரோனா பரவல் சிறிது சிறிதாக குறைந்து வரும், நிலையில் தமிழகத்தில் மேலும் அதிகரித்து வருகிறது,
இதையொட்டி 10 மற்றும் 11 ஆம் வகுப்புக்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்புக்கான தேர்வுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா அதிகரிப்பால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரி இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் வரும் ஜூன் 14 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.