சென்னை:

மிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில்  மழை பெய்ய வாய்ப்பு  உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

கேரளாவில் இந்த வருடத்திற்கான தென்மேற்கு பருவமழை ந்தேதிமுதல் தொடங்கி மழை பெய்து வருகிறது. இந்த வருடத்திற்கான பருவமழை சாதாரண அளவில் தான் இருக்கும் எனவும் நீண்டகால சராசரியில் 100 சதவீதம் வரை மட்டுமே இருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தது. ‘ அதாவது நீண்டகால சராசரியில் 102 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும்,

ஜூன் முதல் செப்டம்பர் வரை வடமேற்கு மழையளவு இந்தியாவில் 107% ஆகவும், மத்திய இந்தியாவில் 103% ஆகவும், தெற்கு இந்தியாவில் 102% ஆகவும், வடகிழக்கு இந்தியாவில் 96% சதவீதமாகும் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த இந்தியாவிலும் 2020 ஆம் ஆண்டு இயல்பைவிட 102 சதவீதம் அதிகரித்து பதிவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி  ஆகிய 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.