·
மத்தியப்பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகம்மது மக்ஸாத். 32 வயது இளைஞர்.
சமீபத்தில் இவர், வயிற்று வலி காரணமாக சஞ்சய் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது, மருத்துவர்கள் அதிர்ந்துவிட்டனர்.
முகம்மது மக்ஸாத் வயிற்றில் ஏராளமான இரும்புப்பொருட்கள் இருந்தன.
உடனடியாக ஆறு மருத்துவர்கள் அடங்கிய குழு, முகம்மதுக்கு அறுவை சிகிச்சை செய்தது.
இறுதியாக முகம்மது மக்ஸாத் வயிற்றிலிருந்து 12 பிளேடு, 4 பெரிய அளவுள்ள ஊசி, செயின், 263 நாணயங்கள், கண்ணாடித் துண்டுகள் ஆகிய பொருட்கள் எடுக்கப்பட்டன.
அந்தப் பொருட்களின் எடை ஐந்து கிலோ இருந்தது.
இதுகுறித்து தெரிவித்த மருத்துவர்கள், “முகம்மது மக்ஸாத் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர், ஆறு மாதம் மற்றொரு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்திருக்கிறார். அவரது மனநிலை நல்ல நிலையில் இல்லை. யாருக்கும் தெரியாமல் அவர், இந்தப் பொருள்களை விழுங்கியிருக்கிறார். தற்போது அவர் நல்ல நிலையில் இருக்கிறார்” என்றனர்.