f
 
புதுடில்லி:
தியான ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் சார்பில் யமுனா நதிக்கரையில் நடைபெற உள்ள  கலாசார விழாவுக்காக இந்திய ராணுவம் பாலங்கள் அமைத்த்து ஏன் என்பது  பற்றிய பரபரப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வாழும் கலை அமைப்பின் சார்பில் மிகப்பெரும் கலாசார நிகழ்ச்சி  இந்த வார இறுதியில் யமுனை நதிக்கரையில் நடைபெற உள்ளது. அந்த அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் பிர்தமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதுமிருந்து  பல லட்சம்  மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்கள்:
இந்தியாவின் முக்கிய புண்ணிய நதிகளில் யமுனாவும் ஒன்று. அங்கு ஓடிவரும் வெள்ளத்தை வழிமறித்து கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இரண்டு பாலங்களை இந்திய ராணுவம் கட்டியுள்ளது. இந்தப் பாலங்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 35 லட்சம் மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலங்கள் அமைக்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டது குறித்து என் டி டிவி தரப்பில் ராணுவத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.ஆனால் இது தொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாலங்கள் அமைக்கும் பணியில் 120  ராணுவ வீர்ர்கள் ஈடுபட்டனர். கலாசார விழா நடைபெறும் இடம் முடிவு செய்யப்பட்ட உடன் பாலம் கட்டும் பணிக்கு உத்தரவிடப்பட்டது. அதேவேளை அங்கு கூடும் மக்களுக்கு எவ்வித அசாம்பாவிதங்களும் காயங்களும்  ஏற்பட்டால் அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்பதை  உயர் அதிகாரிகள்  தெளிவுபடுத்தி உள்ளனர்.
பாலங்கள் கட்டுவதற்கான செலவினை வாழும் கலை அமைப்பினர் ஏற்றுக் கொள்வார்கள். பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி மற்றும் மிகப்பெரிய எண்ணிக்கையிலான மக்கள் கூட்ட நெரிசல் இவற்றை கருத்தில் கொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் பாதுகாப்பு உதவி கோரியுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை அன்று யமுனை நதிக்கரையில் தொடங்கப்படும்  இந்த 3 நாள் உலக கலாசார விழாவினால் யமுனை நதி மிகப்பெரும் சுற்று சூழல் சீர்கேட்டுக்கு உள்ளாகும் என்றும் எனவே இந்த  விழாவினை இங்கு நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை சுற்றுச் சூழல் ஆர்வலர் ஆன்ந்த் ஆர்யா வலியுறுத்தி உள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் துவக்கவிழாவில் பிரதமருடன் குடியர்சுத்தலைவர் பிரணாப் முகர்ஜியும் கலந்து கொள்வார் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த்து. ஆனால் குடியர்சுத் தலைவை இதில் கலந்து கொள்ளமாட்டார் என கடந்த திங்களன்று  தகவல் வெளியானது.
தியானம், யோகா, அமைதிப் பிரார்த்தனைகள் மற்றும் பாரம்பரிய கலாசார நிகழ்வுகள்  ஆகியவை இந்த 3 நாட்கள் நடைபெறும். இதற்காக உலகம் முழுவதுமிருந்தும் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்றும் வாழும் கலை அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.
இவ்விழாவினால் யமுனை நதியின் சுற்றுச் சூழலுக்கு நிரந்தர பாதிப்பு ஏற்படும் என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள வாழும் கலை அமைப்பினர்,   அவ்வாறு சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் எவ்விதப் பொருட்களையும் பயன்படுத்தப்போவதில்லை என்றும், துணி, களிமண், மரக்கட்டை, சுண்ணாம்பு போன்ற சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களைக் கொண்டுதான் விழா அரங்கம் அமைக்கப்படுவதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் ஒப்புதல் பெற்றுத்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாகம் வாழும் கலை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்,
பிரதமர் மோடிக்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தியான முறையில்  மிகவும் நெருக்கமானவர் என்றும், இந்தியாவின் மிகப்பெரிய சக்திவாய்ந்த மனிதர்களில் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் ஐந்தாவது நபராக போர்ப்ஸ் பத்திரிகையால் ஒரு முறை தேர்வு செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிட்த்தக்கது.
அரசியல் தலைவர்கள், கலைஞர்கள் ஆன்மிக  மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோர் உலகம் முழுவதும் அமைதி, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றை பரப்புவதற்கான தளமாக இந்த கலாசார விழா திகழும் என்று வாழும் கலை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.