ஸ்ரீதிவ்யாவையும் அரவணைத்த விஷால்

Must read

divyasri

டிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளராக வெற்றி பெற்ற கையோடு, தனது அடுத்த படத்தின் வேலைகளையும் துவங்கிவிட்டார் விஷால். தேர்தலில் எதிர் அணியில் முக்கிய பொறுப்பு வகித்த ராதாரவி, விஷாலை பேசிய பேச்சை யாரும் மறக்க முடியாது. ஆனாலும், “மறப்போம், மன்னிப்போம்” என்ற கொள்கையோடு, புதிய படத்தில் ராதாரவிக்கு வாய்ப்பு கொடுத்திருப்பதை ஏற்கெனவே எழுதியிருந்தோம்.

இந்த படத்தில் இப்போது ஹீரோயினும் உறுதி செய்யப்பட்டுவிட்டார். அது ஸ்ரீதிவ்யா   “வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, “ஜீவா’, “காக்கிச்சட்டை” என ஹிட் கொடுத்த ஆகிய வெற்றி படங்களில் நடித்து ராசியான நடிகை என்ற பெயர் பெற்ற ஸ்ரீதிவ்யா, இடையில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். தவிர இவர் நடித்த முதல்படம் இன்னும் வெளியாகவில்லை.

ஆனாலும் இந்த சென்ட்டிமெண்ட்டுகளை எல்லாம் பார்க்காமல் ஸ்ரீதிவ்யாவையே தனது படத்துக்கு புக் செய்திருக்கிறார்.

தேர்தலில் தோற்று, மனரீதியாக ஒடுங்கிக்கிடந்த ராதாரவியை மட்டுமின்றஇ, படம் இல்லாமல் இருந்த ஸ்ரீதிவ்யாவையும் அரவணைத்திருக்கிறார் விஷால்.

More articles

Latest article