rail

 

சென்னை: தமிழக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படும் என்று சுங்கத்துறை அறிவித்தது. இந்த நிலையில், நிவாரண பொருட்களுக்கு ரயிலில் கட்டணம் இல்லை என ரயில்வே அறிவித்துள்ளது.

சுங்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை மற்றும் பிற மாவட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்காக வெளிநாடுகளிலிருந்து ஏராளமானோர் நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகிறார்கள். அந்த பொருட்களுக்கு சுங்க கட்டணத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கைவிடுத்தனர்.

இதையடுத்து, வெளிநாடுகளிலிருந்து வெள்ள நிவாரணத்துக்காக அனுப்பப்படும் உணவு, மருந்து, துணிமணிகள் உள்ளிட்டவற்றுக்கான சுங்க கட்டணத்தை விலக்கு அளிக்கப்படுகிறது.

எனவே, வெளிநாட்டிலிருந்து மேற்கண்ட நிவாரணப் பொருட்களை பெறுவோர், இறக்குமதி செய்யும் பொருட்களின் விவரத்தை மத்திய நிதித்துறையிடம் முன்கூட்டியே தெரிவித்து அதற்கான ஒப்புதல் கடிதத்தை பெற வேண்டும். அந்தக் கடிதத்தை சுங்கத் துறை அதிகாரிகளிடம் காண்பித்தால் பொருட்களை சுங்க வரியின்றி பெற்றுக்கொள்ளலாம்.

இதுபற்றிய கூடுதல் விவரங்களை பெற… சுங்கத்துறை முதன்மை ஆணையர்: 044-22560406 கூடுதல் ஆணையர்: 8754551301 இணை ஆணையர்: 9789521852 உதவி ஆணையர்: 9443246440 ஆகியோரை தொடர்புகொள்ளலாம்.

என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இதேபோல் ரயில் கொண்டுவரும் நிவாரண பொருட்களுக்கு கட்டணம் இல்லை என அத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து மேல் விவரங்களை அறிய அருகில் உள்ள ரயில்வே நிலையங்களை தொடர்புகொள்ளலாம்.